காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதற்கு தடங்கலாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
அனைத்து போர்களை போலவே இந்த போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே என்றும் யுனிசெஃப்பின் நிரைவேற்று அதிகாரி கத்தரின் ரசல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரத்தைத் துண்டிப்பது, உணவு, எரிபொருள் மற்றும் நீரை காசாவுக்குள் கொண்டு செல்வதை தடுப்பது குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.