காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று புதன்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று காலை திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மழை குறைந்தாலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மேலும் சீரற்ற காலநிலையால் அங்குமட்டும் 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.