அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 2026 செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, 992,053 குடும்பங்களுக்கு மொத்தமாக 9,181,696,250 ரூபா தொகை செப்டம்பர் மாத கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
மேலும், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளுக்காக 213,335 குடும்பங்களுக்கு 2,120,856,250 ரூபா தொகையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிதி தொகைகள் 2026 செப்டம்பர் 16 ஆம் திகதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுவதுடன், செப்டம்பர் 17 ஆம் திகதி முதல் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.














