கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, கடன் வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
எனினும், இந்நாடுகளுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக, தமக்கு அறிவிக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் இலக்குகளுடன் நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கு, ஒப்பந்தங்களின் முழு தொகுப்பையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமது கடன்களை அகற்றுவது தொடர்பாக இலங்கையுடன் பூர்வாங்க உடன்படிக்கையை எட்டியதாக சீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.