பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் சபதம் செய்துள்ள நிலையில் போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல், தற்போது கோபத்துடனும் விரக்தியுடனும் இருக்கும் என்பதை தான் அறிவதாகவும் எவ்வாறாயினும் போர் விதிகளின்படி செயல்படுவது அவசியம் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியுள்ள ஜோ பைடன், ஹமாஸ் ஆதரவாளரான ஈரான் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க யூத சமூகத் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 1,200 பேர் கொல்லப்பட்ட இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் யூதர்களுக்கு மிகக் கொடிய நாள் என கூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் நேற்று புதன்கிழமைக்கு முன்னதாக நெதன்யாகுவுடன் பேசியதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.