மின்சாரம் இன்மை மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் கல்லறைகளாக மாறி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
காசாமுழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே பணியாளர்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோக பற்றாக்குறையால் தத்தளித்து வருகின்றன.
அதே நேரத்தில் தொடர்ச்சியாக இஸ்ரேல் நடத்தும் குண்டு தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.