வாக்காளர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கியே வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது ஒரு நல்ல நாட்டை உருவாக்க முடியும் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை 75 வருடங்களாக இலங்கை தவறான தேசமாக இருந்ததாகவும், அந்தத் தவறு தற்போது உச்சத்தை எட்டியதாகவும் கூறினார்.
இந்த தவறை தற்போது திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்ந்தும் தெரிவித்து வருவதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.