பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவின் தெற்கு பகுதியில், இன்று 5.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல், இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.