ஜோர்டனில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்ட போது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக தமது எல்லைக்குள் நுழைய முயன்ற போது இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
இருவரும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சித்ததால், அதிகாரிகள் அவர்களை மீண்டும் ஜோர்டனுக்கு அனுப்புவார்கள் என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 44 வயதான மற்றும் 50 வயதுடைய இரு பெண்களும் தேவையான பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கை செய்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.