இன்னமும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலை இரத்து செய்தால், 2025, ஒகஸ்ட் வரை பொதுத் தேர்தலை நடத்த வேண்டியதில்லை.
அப்படியானால், இன்னமும் இரண்டு வருடங்களுக்கு இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கலாம்.
2024, செப்டம்பர், ஒக்டோபரில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலையே இல்லாது செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.