ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு இந்தியாவின் டெல்லி உயர் நீதிமன்றம், சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது,
இது அதன் எல்லைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது குறித்து நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்குமாறு கோரிய மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக 10 நாட்கள் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், கடந்த மே 11-ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமற்றது எனவும் அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றத்தினால் கண்காணிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.