சீன அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, நீரியல்வள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன், கடற்தொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் பத்மன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நபர் ஒருவருக்கு 78 லீற்றர் என்ற அடிப்படையில் மண்ணென்னை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.