காசாவில் நீரினால் பரவும் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசாவின் கடைசியாகச் செயல்படும் கடல்நீரை உப்புநீக்கும் ஆலை இன்று மூடப்பட்டுள்ளது அத்தோடு நீரை தூய்மையாக்கும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதன் காரணமாக நீரிழப்பு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவின் சில பகுதிகளில் இன்று மூன்று மணிநேரம் நீர் கிடைத்த போதும் அவை அந்தப் பகுதியில் உள்ள மக்களில் 14 சதவிகிமாணவர்களுக்கு மட்டுமேபோதுமானதாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.