பாலஸ்தீனத்தில் போரினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஐஸ்கிரீம் வண்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலினால் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும், இதனால் அங்குள்ள வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிக்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் வண்டிகளை தாம் பிணவறைகளாக மாற்றி வருவதாகவும் வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.