நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அதே 118 ஹொட்லைன் மூலம் இப்போது பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்றும் தற்போது அறிவித்துள்ளது.
பெயர் குறிப்பிடாமல் தகவல்களை வழங்க முடியும் என்றும், தகவல் மற்றும் தகவல் தருபவரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொட்லைன் இலக்கம் 24 மணி நேரமும் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.