மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர்
அதன்படி ,முதல் கட்ட சோதனையாக நேற்று (ஞாயிற்க்கிழமை) ககன்யான் மாதிரி விண்கலத்தை சிறியவகை ரொக்கெட் மூலம் விண்ணில் சுமார் 16.6 கிலோமீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று,
அதன்பிறகு அதில் இருந்து மாதிரி விண்கலத்தை பிரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 17 கிலோமீற்றர் உயரத்தில் ரொக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.