அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக அறியமுடிகின்றது.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக இவர்களை கட்சியின் உறுப்புரிமையை நீக்கவும் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தில் இணைந்து கல்வி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட ஏ.எச்.எம். பௌஸிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தான் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ளவில்லை என்பதனால் தனக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.