ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) இராஜினாமா செய்ய வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ்” பாலஸ்தீனத்தின் காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இக்கருத்தானது உலகரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இக் கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.