காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் சில மேலும் தீவிரத்தை தூண்டுவதற்கும், முடிந்தவரை பல நாடுகளையும் மக்களையும் மோதலுக்கு இழுக்க முயல்கின்றன என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் ஒரு உண்மையான குழப்பம் மற்றும் பரஸ்பர வெறுப்பு அலையைத் தொடங்குவதே அவர்களின் நோக்கம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நோக்கத்திற்காக, மில்லியன் கணக்கான மக்களின் தேசிய மற்றும் மத உணர்வுகளை விளையாட முயற்சிக்கின்றனர் என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.