”பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாதுயென” யாழ்ப்பாண உதவி பொலிஸ்அத்தியட்சகர் ஜாரூல் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(26) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாங்கள் உயிரைப் பணயம் வைத்து தான் கடமை செய்கின்றோம். பொலிஸார் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து, உயிரை பணயம் வைத்தே கடமையாற்றி வருகின்றார்கள்.
மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும், முதலில் நாடுவது பொலிஸ் நிலையத்தை தான்.
நாங்கள் ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் எங்களால் யாழில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாகயுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.