கிளிநொச்சியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் கார்மாநாடு, கல்லாறு, கிளாலி, முருசுமோட்டை, உமையாள்புரம், அக்கராயன்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் உட்பட பல பிரதேசங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகள் சிலர், டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவது குறித்தும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.