இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் 12 போரையும் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி நெடுந்தீவு அருகே அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் 3 படகும் கைப்பற்றப்பட்டது.
இதனை அடுத்து கடந்த 15 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் விளக்கமறியல் காலம் இன்று மேலும் நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.