போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி அறிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி தாக்குதலின் போது காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்க ஹமாஸுக்கும் அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசா பகுதியில் தற்போது 229 பேர் பணயக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் இரு அமெரிக்க-இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட இரு கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை இரண்டு வயதான இஸ்ரேலிய பெண்களை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.