ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக – வினரால் ‘நீட்’ தேர்வை ஒழிக்க முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்
கட்சி பிரமுகரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் ஆதாயத்துக்காக திமுக மாணவர்களை குழப்பி வருகின்றது.
மேலும் நீட் போன்ற எந்த தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வர் என்றும் நீட்டை எதிர்க்கிறேன் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை குழப்பி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்