உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் வாரம் நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் கடந்த 19ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் நாடாளுமன்ற வாரத்தின் இறுதி நாளான 10ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதமும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதமும் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அதன் இரண்டாம் வாசிப்புக்கான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 21ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுவின் விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதனடிப்படையில், அதன் இரண்டாம் வாசிப்புக்கான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 21ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுவின் விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.