உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சூழல் மாசடைந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்களின் தேவைகளுக்கேற்ப உற்பத்தி பொருளாதாரமும் அதிகரித்து வருகின்றது.
பார்க்கும் அனைத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கின்றது. 1950ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிறாஸ்டிக் உற்பத்தி தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து விட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவடைய கிட்டதட்ட 250 தொடக்கம் 300 ஆண்டுகள் வரை செல்கின்றது.
இந்நிலையில் , தாய்ப்பாலில் நுண்ணுயிர் பிளாஸ்டிக் கலந்துள்ளதாக இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக ரு{ஹனு பல்கலைக்கழக இரசாயனவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சிந்தக சனத் கங்கபடகே தெரிவித்துள்ளார்.
காலியில் அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நீல சமுத்திர பைலட் திட்டத்தின் இரண்டாவது அமர்வின் போது பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாங்கொடையில் இருந்து தங்காலை வரை கடல் மணல் மற்றும் தண்ணீரை எடுத்துச் சென்று மைக்ரோபிளாஸ்டிக் உள்ளதா என சோதித்த போது ஒவ்வொரு துகளிலும் மைக்ரோபிளாஸ்டிக் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக ரத்கம, ஹிக்கடுவ, வெலிகம, தெவிநுவர போன்ற மீன்பிடி மற்றும் சுற்றுலா பிரதேசங்கள் உள்ளடங்கலாக முப்பத்தைந்து பிரதேசங்களில் இவை கண்டறயப்பட்டுள்ளன. இத்தாலியில் தாய்மார்கள், இருபத்தைந்து பேரின் பாலை ஆராய்ந்த போது தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.