சொத்து வரி ஒன்றை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இவற்றில் சாதாரண மக்களின் சொத்துக்கள் உள்ளடங்க மாட்டாது என்றும் உயர் வருமானம் ஈட்டுபவர்களின் சொத்துக்களே இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் இதனை நடைமுறைப்படுத்தவதற்கே தற்போது முன்மொழியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.














