போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு மாளிகாகந்த நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, மற்றும் மருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியான சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோருக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்துமாறு இரகசியப் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.