ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ( AIIB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JISA), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID), உள்ளிட்ட பல முக்கியமான ஸ்தாபனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது ” இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கான சவால்கள், வாய்ப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















