ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதிகள் விவகார ஆணைக்குழு மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளன.
பெரும்பாலானவர்கள் பெத்லஹேம், ஹெப்ரோன், நப்லஸ் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் ஜெனின், துல்கர்ம், ரமல்லா மற்றும் ஜெருசலேம் ஆகிய இடங்களில் கைது செய்யப்ட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாகவும் கைதிகள் விவகார ஆணைக்குழு மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 1,740 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.