பாடசாலை மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு டிப்போ அத்தியட்சகர்களுக்கும் இத்தீர்மானம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முறையான பயிற்சி மற்றும் அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவி சாரதிகளை சேவையில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குறித்த சாரதிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சில சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவதை அவதானித்ததன் காரணமாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.