தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் அதனை தட்டிக்கழிக்கும் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை வருந்தத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உட்பட முழு இந்தியாவிற்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் கடந்த மூன்று முறை கிடைத்த போதும் அந்த வாய்ப்புகளை தமிழக அரசாங்கம் தவறவிட்டது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தவறுகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது இப்போது தமிழக அரசாங்கம் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை நடத்த வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.