அரசாங்கத்துடன் தொடர்புடைய, அரச பணி புரியும் எந்தவொரு நபரும் WeChat சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் தகவல்களை திருடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதை கருத்திற் கொண்டே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படுகிறது. WeChat மூலம், Facebook, Amazon மற்றும் Tinder போன்ற செயலிகளுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.