I.N.D.I.A. எனும் கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A. கூட்டணிக்குள் ஒரு சில பிரச்னைகள் நிலவுகின்றன. 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் இக்கூட்டணி பலவீனமாக இருக்கின்றது எனவும் வாக்குகளின் அமர்வுகளை ஒதுக்குவதில் தொடர்ந்தும் பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறன. இந்த நிலையில், 5 மாநிலத் தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார்.