2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய சமூக ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் தலைநகரில் உள்ள எவின் சிறைச்சாலையிலிருந்து நோபல் குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 6ஆம் திகதி நோபல் குழுவினால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பெண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியதற்காக நர்கீஸ் முகமதி 31 ஆண்டுகளாகச் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
51 வயதான இவர், ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.