மக்கள் நலன்சார்ந்த வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் மத்தியில் செல்வதாக இருந்தால் மக்களின் நல் அபிப்பிராயங்களை சம்பாதிக்க வேண்டும்.
மக்களுக்கான நலன் நோன்பு திட்டத்தை முன்னெடுத்தால் மாத்திரம் தான் அதனை பெற்றுக் கொள்ள முடியும்.
அதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வருமானம் போதியதாக இல்லை என்கின்ற காரணத்தினால் பல வைத்தியர்கள் தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிலர் இன்னும் வெளியேறுகின்றனர், இது சுகாதாரத் துறைக்கு ஒரு பேரிடியாக அமைகின்றது.
வைத்தியசாலைகளில் வைத்திய தட்டுப்பாடு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இக்கட்டான சூழ்நிலை தற்போதைய ஜனாதிபதி தான் ஆட்சியை பொறுப்பெடுத்தார் விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் முடிந்த அளவு சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த நிலைமையில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் நாட்டினை பாதாளத்திற்கு கொண்டு செல்லமுடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.