தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கலைப் பட்டப் படிப்புகளை மேம்படுத்த உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கலைத்துறையில் 314 பட்டப்படிப்புகள் உள்ளதாகவும் அந்தப் பட்டப் படிப்புகளின் தரத்தைப் பேணுவதுடன், தற்போதைய வேலை உலகிற்கு ஏற்றவாறு பொருத்தமான அபிவிருத்திகள் செய்யப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொடர்புடைய அபிவிருத்திகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூகத்தின் தற்போதைய வேலைத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொழில்முறை மற்றும் நடைமுறை திறன்களை வளர்த்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.