வடமேற்கு நேபாளத்தின் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்துள்ள நிலையில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குறித்த நிலநடுக்கத்தால்; சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு நேபாளத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,