சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் இந்நிலையில் சொத்து விபரங்களை மறைக்கும் அளவுக்கு பெருமளவான சொத்துக்கள் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதை விடுத்து அரசியல் நோக்கத்துக்காக தான் இலக்கு வைக்கப்படுவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்த தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சரியாக இடம்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.