தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியையே 46 வீதமான மக்கள் விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கணக்கெடுப்பின்படி தற்போதைய அரசாங்கத்திற்கு 17 வீதமான மக்களின் அங்கீகாரமும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு 29 வீதமும், பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.