பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி ஏழாவது முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் கிண்ணத்தை நோவக் ஜோகோவிச் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் 40வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ள அவர், ஏற்கனவே சின்சினாட்டியில் மாஸ்டர்ஸ் கிண்ணம் மற்றும் மூன்று கிராண்ட்ஸ்லாம்கள் என இந்த ஆண்டில் ஆறு பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் 36 வயதான நோவக் ஜோகோவிச், இதுவரை 33 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார்.
உலகத் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை இறுதி போட்டியில் எதிர்கொண்டது நோவக் ஜோகோவிச்சிற்கு பாரிய சவாலாக அமையவில்லை.