WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரில் மழையால் இடைநிறுத்தப்பட்ட நேற்றைய அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலெங்காவை வீழ்த்தி இகா ஸ்விடெக் வெற்றிபெற்றுள்ளார்.
இப்போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அரினா சபலெங்காவை வீழ்த்தி இகா ஸ்விடெக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இறுதி போட்டியில் உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையான போலந்து நாட்டைச் சேர்ந்த 22 வயதான இகா ஸ்விடெக், 5 ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயதான ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்ளவுள்ளார்.
இரண்டு வீராங்கனைகளும் ரவுண்ட்-ரொபின் சுற்றில் எந்த தோல்வியையும் அடையவில்லை. அத்தோடு ஜெசிகா பெகுலாவை எதிர்த்து வெற்றி பெற்றால் மீண்டும் இகா ஸ்விடெக் உலகின் முதல் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெரும் அதேநேரம் பெகுலா வெற்றி பெற்றால், அரினா சபலெங்கா முதலிடத்தை பெறுவார்.
WTA பைனஸ்ல் போட்டியில் முதலாம் இடடம் கை மாறுவது இது ஐந்தாவது முறையாகும். இறுதியாக 2009-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் தினரா சஃபினாவை முந்தினார்.