சம்மாந்துறையில் அண்மைக்காலமாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது” சம்மாந்துறையில் திருட்டுச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாடுகள் அதிகளவில் களவாடப்பட்டு வருகின்றன.
அத்துடன் இவ்வாறு களவாடப்படும் மாடுகள் அறுவைக்கு உள்ளாக்கப்பட்டு பங்கு இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
ஆகவே பொது மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் உங்களுடைய பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடினால் உடனடியாக எமக்கு அறியத்தாருங்கள்” இவ்வாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.