நுவரெலியாவில் உள்ள பிரசித்திபெற்ற தபால் நிலையத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நுவரெலியா தபால் அலுவலகம் நுவரெலியா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரசித்திபெற்ற கட்டிடமாகும்.
டியூடர் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி சிவப்பு செங்கல் கட்டிடமானது நாட்டின் பழமையான தபால் நிலையங்களில் ஒன்றாகும். எனினும் குறித்த கட்டிடமானது தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனை அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த கட்டிடத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க தீர்மாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.