கென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு பல வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தெற்கு சோமாலியாவின் ஜூபாலாண்ட் மாநிலத்தில் உள்ள லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை பாதுகாக்க அவசர மற்றும் மீட்புப் படையினர் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.