மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் களுத்துறை, நாகொட, பிரதேசத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதோடு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


















