200க்கும் மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத்தால் 10,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடலோரப் பகுதியிலிருந்து வெளியேற உதவிய எகிப்துக்கு நன்றி தெரிவித்தார்.
இதேநேரம் காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் உள்ள மக்களுக்கு தண்ணீர், உணவுகள், மருத்துவ உதவி தேவை என்றும் அதனை வழங்க போர்நிறுத்தம் அவசியம் என்றும் கூறியுள்ளார்.