40 பிலிப்பைன் நாட்டவர்கள் காசா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக சென்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
கெய்ரோவுக்கு செல்லும் அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் பிலிப்பைன்ஸுக்கு வருவார்கள் என்றும் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.
காசாவில் இருப்பதாக அறியப்பட்ட 134 பிலிப்பைன்களில் பெரும்பாலானவர்களில் பலர் பாலஸ்தீனியர்களை திருமணம் செய்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தை விட்டு வெளியேற அவர்கள் மணிலாவில் உள்ள அரசாங்கத்திடம் உதவி கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.