கொழும்பில் மூன்று மாத டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
70% க்கும் அதிகமான இடங்கள் டெங்கு-தொற்று வளாகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு தேவையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.