ஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள இடங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் ஹமாஸ் பாணியில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 60 அந்நிய தேசத் தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் அவர்கள் பதுங்கி இருக்கும் பகுதிகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும் உளவுத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.